Skip to main content

Healthy Matter

நீங்களும் மருத்துவர்தான்
அன்பார்ந்த நண்பர்களே வணக்கம்.....
நம்முடைய நண்பர்களோ அல்லது உறவினர்களோ நோயுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், அவர்களை கண்டு நலம் விசாரிக்க செல்கிறோம் எனும்போது.... நீங்கள் உங்களது மனநிலையை எவ்வாறு வைத்து கொள்வீர்கள்... அவர்களுடைய சோகத்தில் பங்குகொள்ளும் வகையிலா...? ஆம் என்றால் நான் உங்கள் கருத்தில் இருந்து மாறுபடுகிறேன் என்று அன்புடனும் சற்று வருத்ததுடனும் கூறிகொள்கிறேன் நண்பர்களே...! ஏனெனில்.... ஒருவருடைய உடல் நலம் தேற மருத்துவர் அளிக்கும் மருந்தை விட... சந்தோஷ மன நிலைதான் அவசியம். 


எனவே அவர்களுடைய சோகத்தில் நீங்கள் பங்குபெற்று அவரை மேலும் நோகசெய்வதைவிட... உங்களுடைய சந்தோஷ மனநிலையில் அவரை பங்குபெற செய்து நோயாளியை தான் நோயாளி என்ற எண்ணத்திலிருந்து விடுபட செய்யலாமே...! 


 எவ்வாறெனில் - திரைப்படங்களை பற்றியோ, பாடல்களை பற்றியோ...  இதுபோல்  நோயாளி எது சம்பந்தமான துறையில் ஆர்வமிக்கவர் என அறிந்து... அது சம்பந்தமாகவே  அவரிடம் உரையாடினால் நல்லது. அதே போல் நோயாளி காண செல்வதில் வழக்கமாக ஹார்லிக்ஸ்... ஆப்பிள்... க்ளுகோஸ் என எதாவது கொண்டுசென்று அவரை தான் நோயாளி என்ற எண்ணத்தை ஆணித்தரமாக வளர்ப்பதை விட... தினசரி, வார, மாதாந்திர பத்திரிகைகள், ஜோக், துணுக்கு புத்தகங்கள் என கொண்டுசென்று அவரிடம் தரலாம். இதனால் அவரது கவனம் நோயின் மனநிலையில் இருந்து விடுபட்டு சகஜ நிலைக்கு உறுதியாக திரும்பும். (பொருளாதாரத்தில் சற்று வறியவர் எனில் அவரது நோயின் தன்மைக்கு ஏற்றவாறு பொருளை வாங்கி செல்வதுடன் அவசியம் பத்திரிக்கை, புத்தகங்களை வாங்கிசெல்ல மறக்காதீர்கள்). மிக முக்கியமாக அவருடன் ஜாலியாக அவரது விருப்பபடி பேச்சு கொடுத்துகொண்டே இடையில்


அவரது நோயின் தன்மை, நடைபெறும் மருத்துவ தன்மைகளை அறிந்து உங்களுக்கு(உண்மையில்) தெரிந்த உபயோகமான டிப்ஸ்களை தரலாம்.   

இதன் மூலம் நோயாளி நோயின் தன்மைகளில் விடுபட தாங்கள் பங்குகொள்வதில் நீங்களும் ஒருவிதத்தில் மருத்துவர்தான்..
  
அன்புடன் 
Neelmein


Comments

Popular posts from this blog

An inspirational slide show on Eye of the Tiger

some Illusions

கண்ணை  நம்பாதே...  உன்னை ஏமாற்றும்.. உன்னை ஏமாற்றும்... நீ காணும் தோற்றம்  Just click on each image to view Bigger size ஒவ்வொன்றின்  மீதும்  கிளிக்  செய்து  பெரிய  அளவில்  பார்க்கவும்    

Amudha-- Tamil Horror Short Film