சிறப்பிக்க வேண்டுமாய்..... பொதுவாக தெரிந்த நபர்களில் ஒருவரிடமிருந்து திருமண அழைப்பு பத்திரிக்கை வருகிறது என வைத்துகொள்வோம். மனதில் உடனே தோன்றுவது... அன்று விடுமுறை நாளா அல்லது வேலை நாளா? திருமணத்திற்கு செல்ல முடியுமா? முடியும் எனில் எந்த டிரஸ்-இல் செல்லலாம்? என்ன அன்பளிப்பு தருவது? ஓகே... அழகான உடை உடுத்தி திருமணத்திற்கு செல்கிறோம். திருமண அழைப்பாளரிடம் எங்களது வருகையை தெரிவித்துக்கொண்டு, மணமக்களை வாழ்த்திவிட்டு அன்பளிப்பையும் அவர்களிடம் அளித்து (ஞாபகமாக போட்டோ வீடியோ விற்கு போஸ் குடுத்து) நண்பர்கள் உறவினர்கள் என அறிந்தவர்களிடத்தில் சந்தோசமாக பேசி மகிழ்ந்து. சுவையான விருந்தை திருப்தியாக உண்டு விடைபெற்று வருகிறோம். அவ்வளவுதான் இல்லையா....? இல்லை நண்பர்களே.... எனக்கு ஏதோ ஒரு குறை மனதில் படுகிறது. ( மறுபடியும் ப்ளீஸ்.... ) ..... அழகான உடை உடுத்தி திருமணத்திற்கு செல்கிறோம். திருமண அழைப்பாளரிடம் நம் வருகையை தெரிவித்துக்கொண்டு, ஏதேனும் நான் செய்வதற்கு வேலைகள் உண்டா? என உரிமையுடன் கேட்டு, வேலை இருந்தால் செய்து, பரவாயில்லை...