சிறப்பிக்க வேண்டுமாய்.....
திருமண நிகழ்ச்சி என குறிப்பிடப்பட்டது எடுத்துக்காட்டாகதான். இதுபோல் எந்த நிகழ்ச்சியானாலும் அதற்கு ஏற்றாற்போல் ஆதரவாக பேசிவருவது நட்பை, உறவை வளர்க்கும் நண்பர்களே...
பொதுவாக தெரிந்த நபர்களில் ஒருவரிடமிருந்து திருமண அழைப்பு பத்திரிக்கை வருகிறது என வைத்துகொள்வோம். மனதில் உடனே தோன்றுவது... அன்று விடுமுறை நாளா அல்லது வேலை நாளா? திருமணத்திற்கு செல்ல முடியுமா? முடியும் எனில் எந்த டிரஸ்-இல் செல்லலாம்? என்ன அன்பளிப்பு தருவது?
ஓகே... அழகான உடை உடுத்தி திருமணத்திற்கு செல்கிறோம். திருமண அழைப்பாளரிடம் எங்களது வருகையை தெரிவித்துக்கொண்டு, மணமக்களை வாழ்த்திவிட்டு அன்பளிப்பையும் அவர்களிடம் அளித்து (ஞாபகமாக போட்டோ வீடியோ விற்கு போஸ் குடுத்து) நண்பர்கள் உறவினர்கள் என அறிந்தவர்களிடத்தில் சந்தோசமாக பேசி மகிழ்ந்து. சுவையான விருந்தை திருப்தியாக உண்டு விடைபெற்று வருகிறோம். அவ்வளவுதான் இல்லையா....?
இல்லை நண்பர்களே.... எனக்கு ஏதோ ஒரு குறை மனதில் படுகிறது.
(மறுபடியும் ப்ளீஸ்....)
..... அழகான உடை உடுத்தி திருமணத்திற்கு செல்கிறோம். திருமண அழைப்பாளரிடம் நம் வருகையை தெரிவித்துக்கொண்டு, ஏதேனும் நான் செய்வதற்கு வேலைகள் உண்டா? என உரிமையுடன் கேட்டு, வேலை இருந்தால் செய்து, பரவாயில்லை வேலை ஏதும் இல்லை, தேங்க்ஸ் என கூறினாலும், நாமாகவே மேலும் வரும் விருந்தினர்களை அன்புடன் அமர வைக்கலாம், விருந்து நடைபெறும் இடத்திற்கு சென்று பரிமாறலாம், பரிமாற தேவையான நபர்கள் இருந்தபோதும், விருந்து உண்பவர்களிடம் தேவைகளை கேட்டறிந்து பரிமாறுபவர்களை அவர்களிடம் அனுப்பிவைக்கலாம் ( உங்களால் முடிந்த அளவு) - இதுபோல். பின்பு அன்பளிப்பை மணமக்கள் வசம் அளித்து ( போட்டோ வீடியோ விற்கு போஸ் குடுத்து) நண்பர்கள் உறவினர்கள் என அறிந்தவர்களிடத்தில் சந்தோசமாக பேசி மகிழ்ந்து. விருந்தை உண்ட பின்பு முக்கியமாக நிகழ்ச்சியாளரிடம் - நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்தது, விருந்து மிக மிக அருமையாக இருந்தது, உங்கள் உடையலங்காரங்கள் வெகுசிறப்பாக இருக்கின்றன, உங்கள் வீடு நிகழ்ச்சியின் மூலம் இன்றையதினம் மகிழ்ச்சியாக கழிந்தது, ( நிகழ்ச்சியாளர் நிதியடிப்படையிலோ உடல் ரீதியிலோ எவ்வளவோ கஷ்டங்களுகிடையே நடத்தியதற்கு - இதுபோன்ற நட்பு ரீதியான வார்த்தைகளே அவர் பட்ட கஷ்டங்களுக்கு இனிமையான மருந்தாக அமையும்). என இதுபோல் சில வார்த்தைகளை கூறியபடி விடைபெற்று வருவது முக்கியம் .
இதில் தான் பத்திரிக்கையின் குறிப்பிடப்பட்ட வாசகமான - தாங்கள் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம் என்பதற்கு அர்த்தமாக அமையும்.
இதில் தான் பத்திரிக்கையின் குறிப்பிடப்பட்ட வாசகமான - தாங்கள் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம் என்பதற்கு அர்த்தமாக அமையும்.
திருமண நிகழ்ச்சி என குறிப்பிடப்பட்டது எடுத்துக்காட்டாகதான். இதுபோல் எந்த நிகழ்ச்சியானாலும் அதற்கு ஏற்றாற்போல் ஆதரவாக பேசிவருவது நட்பை, உறவை வளர்க்கும் நண்பர்களே...
நட்புடன்
Neelmein
Comments