பிச்சை இடாதீர்கள் - ப்ளீஸ்....! டியர் வாசர்களே... நாம் வீட்டை விட்டு சாலையில் இறங்கி விட்டாலே - ஏகப்பட்ட பிச்சை காரர்களை காண நேருகிறது. நம்மிடம் கையேந்தி தொல்லை தருகிறார்கள். நீங்கள் பிச்சை இடுகிறீர்கள். சில சமயம் அவர்கள் கையேந்தமலேயே நீங்கள் பிச்சை இடுகிறீர்கள். நீங்கள் தானம் செய்வதாக நினைதுகொள்கிறீர்கள். உண்மையில் நீங்கள் செய்வது ஒருவகையில் துரோகம்தான். நான் அடிக்கடி சென்னைக்கும் கோவைக்கும் இடையே வியாபார நிமித்தமாக ரயில் பயணம் செய்கிறேன். அந்த 8 மணி நேர பயணத்தில் நான் காண்பது - நல்ல உடல்வாகுடன் உள்ளவர்கள் பிச்சை எடுப்பதும் , உடல் வளர்ச்சி குன்றிய மற்றும் கண் பார்வையற்றவர்கள் சிறு சிறு வியாபாரம் செய்வதும் காண்கிறேன். (கை கால் முழு வளர்ச்சியடையாமல் ஒருவர் கழுத்திற்கும் தோளுக்கும் இடையில் புத்தகங்களை இறுக்கி பிடித்து கொண்டு தவழ்ந்து தவழ்ந்து வந்து வியாபாரம் செய்தும், கண் பார்வையற்றவர்கள் சிறுவர்களுக்கான விளையாட்டு பொர...