பிச்சை இடாதீர்கள் - ப்ளீஸ்....!
டியர் வாசர்களே... நாம் வீட்டை விட்டு சாலையில் இறங்கி விட்டாலே - ஏகப்பட்ட பிச்சை காரர்களை காண நேருகிறது. நம்மிடம் கையேந்தி தொல்லை தருகிறார்கள். நீங்கள் பிச்சை இடுகிறீர்கள். சில சமயம் அவர்கள் கையேந்தமலேயே நீங்கள் பிச்சை இடுகிறீர்கள். நீங்கள் தானம் செய்வதாக நினைதுகொள்கிறீர்கள். உண்மையில் நீங்கள் செய்வது ஒருவகையில் துரோகம்தான்.
நான் அடிக்கடி சென்னைக்கும் கோவைக்கும் இடையே வியாபார நிமித்தமாக ரயில் பயணம் செய்கிறேன். அந்த 8 மணி நேர பயணத்தில் நான் காண்பது - நல்ல உடல்வாகுடன் உள்ளவர்கள் பிச்சை எடுப்பதும், உடல் வளர்ச்சி குன்றிய மற்றும் கண் பார்வையற்றவர்கள் சிறு சிறு வியாபாரம் செய்வதும் காண்கிறேன். (கை கால் முழு வளர்ச்சியடையாமல் ஒருவர் கழுத்திற்கும் தோளுக்கும் இடையில் புத்தகங்களை இறுக்கி பிடித்து கொண்டு தவழ்ந்து தவழ்ந்து வந்து வியாபாரம் செய்தும், கண் பார்வையற்றவர்கள் சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்கள் மற்றும் பலவகை பொருட்களை விற்று வருகிறார்கள்) இதில் பிச்சை எடுப்பவர் - வரும் பிச்சை சம்பாத்தியத்தால் தேவையான அளவு பெற்று (சிலர் தேவைக்கு அதிகமாக பெற்று அதனை வட்டிக்கு விட்டும், வங்கியில் முதலீடு செய்தும் வருவதும் உண்டு). சோம்பெறிகளாகவே இருப்பர். இதில் பெரும் கொடுமையாக நான் நினைப்பது, படிக்க வேண்டிய சிறு வயது குழந்தைகளையும் பிச்சை எடுக்க வைத்து அவர்களையும் கெடுத்து விடுகின்றனர். இவர்களால் சமூகத்திற்கு எந்த பலனும் இல்லை. உடல் ஊனமுற்றோர் உழைத்து சமூகத்தில் முன்னேறி வருவர். அவர்களால் சமூகமும் ஒருவகையில் பலனடைகிறது.
இதில் நான் உதவ எண்ணி எதாவது செய்ய நினைத்தால்.... பிச்சை எடுப்பவருக்கு இட்டு, அவர்களின் சோம்பெறிதனதுக்கு நானும் ஒரு காரணம் ஆவதை விட.... உடல் ஊனமுற்றவரிடம் முடிந்த அளவு பொருட்களை வாங்கி ஊக்குவித்து அவர்களது வளர்ச்சியில் பங்கு கொள்வதை பெருமையாக கொள்வேன். ஏதோ ஒரு சூழ்நிலையில் பிச்சை எடுப்பதென்பது தற்காலிகமாக(மட்டும்) இருக்கலாம். ஆனால் அதுவே நிரந்தரமாகி விட கூடாது.
எனவே எனது நட்பான வாசகர்களே இனி மேற்கொண்டும் பிச்சை இடும் மனநிலையில் நன்கு ஆழ்ந்து செயல்படுங்கள்... ப்ளீஸ்....
அன்புடன்
உங்கள் நண்பன்
Neelmein
Comments