புரியாத புதிர்
நான் ஒரு சென்னைவாசி. அடிக்கடி இரு சக்கர வாகன பயணம். இதில் நான் ட்ராபிக் சிக்னலில் நிற்கும்போது என் கண் பார்வையில் படுவது... A . சிகப்பு சிக்னலில் அனைத்து வாகனங்களும் நிற்கும்போது மிதிவண்டி ஓட்டுனர்கள் மட்டும் சிக்னலை மதிக்காமல் சென்றுகொடிருப்பர். இதில் மிதிவண்டிகள் தவிர மோட்டார் வாகனங்கள் அறிந்தோ அறியாமலோ சிக்னலை மீறி செல்லும்போது போக்குவரத்து காவலர் பிடித்து அபராதம் போடும் சூழ்நிலையில் மிதிவண்டிகாரரை மட்டும் கண்டுகொள்வதில்லை
இது குறித்து எனக்கு விடை தெரிய வேண்டிய வினாக்கள்:
- மோட்டார் வாகனங்கள் விதி மீறி செல்லும்போது - மற்ற திசைகளிலிருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறோ அல்லது விதி மீறும் வாகனத்திற்கு ஆபத்தோ ஏற்படும்போது மிதிவண்டி ஓட்டுனர்களால் ஆபத்து ஏற்படாது அல்லது மிதிவண்டி ஓட்டுனருக்கு ஆபத்து ஏற்படாது என்று போக்குவரத்து காவலர் கண்டுகொள்வதில்லையா?
- ஆபத்து ஏற்படுவதில் மோட்டார் வாகன ஓட்டிகளிடம் காட்டும் எச்சரிக்கையான அக்கறை மிதிவண்டிகாரர்களிடம் காட்டுவதில்லையா?
- அனைத்திற்கும் மேலாக - மோட்டார் வாகன ஓட்டிகளை பிடித்தால் கிடைக்கும் லஞ்சம், மிதிவண்டி ஓட்டிகளிடம் கிடைக்காது என்பதலா?
B . பிச்சைகாரர்கள் நிற்கும் வாகனங்களுக்கு இடையில் வந்து பிச்சை எடுத்து கொண்டு இருப்பர். இதனையும் போக்குவரத்து காவலர்கள் கண்டுகொள்வதில்லை.
இது குறித்து எனக்கு விடை தெரிய வேண்டிய வினாக்கள்:
- பிச்சைகாரர்களுக்கு விபத்து ஏற்படாதா?
- பிச்சைகாரர்களுக்கு விபத்து ஏற்பட்டால் விபத்து ஏற்படுத்தியவருக்கு தண்டனை இல்லையா?
- பிச்சைகாரர்களால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்பட்டால் பிச்சைகாரருக்கு தண்டனை இல்லையா?
- பிச்சைகாரர்களிடம் லஞ்சம் கிடைக்காது என்பதால் அவர்களை கண்டுகொள்வதில்லையா?
பிச்சைகாரர்களிடம் லஞ்சம் கிடைப்பதால் அவர்களை கண்டுகொள்வதில்லையா?
( பிச்சைகாரர்களிடம் இரக்கம் என்று மட்டும் சாக்கு சொல்ல வேண்டாம். தண்டனை விதிப்பதே - இனிமேற்கொண்டு தவறு செய்யகூடாது என்பதற்குதான்)
நண்பர்களே தங்களின் வளமையான பதிலை ஆவலுடன் எதிபார்க்கும்
தங்களின் அன்பான
Neelmein
நான்..... 01 - நவம்பர் - 2010 அன்று வெளியிட்ட பிச்சைகாரர்கள் சம்பந்தப்பட்ட இடுகைக்கு பிறகு 'தினகரன்' (சென்னை பதிப்பகம்) நாளிதழில் 07 - நவம்பர் - 2010 அன்று 2 ம் பக்கத்தில் வந்த செய்திக்குரிய படம் இத்துடன் இணைத்துள்ளேன்

Comments